அலகு - 01பாடவேளைகள் - 07
தனித்தனியாக கருதப்படும் போது கருத்து அளிக்கப்பட முடியாத எண்கள், சொற்கள், குறியீடுகள், என்பன தரவாகக் கருதப்படும்.
தகவல்
- உள்ளீடு
- முறைவழியாக்கம்
- வௌியீடு
- தரவுகளைப் பெறுதல்
- தகவல்களை தயார் செய்தல்
- தகவல்களை தேக்கி வைத்தல்
- தேவையான போது வழங்குதல்
- தானியங்கும் காசாள் பொறி
- விரல் அடையாளப் பொறி
- QR குறிமுறை
- சந்தைத் தகவல்களை முறைவழிப்படுத்தல்
தானியங்கி காசாள் பொறி
தரவு - ATM அட்டை, சாவிப்பலகை
முறைவழிப்படுத்தல் - வங்கி கணினி முறைமை
வௌியீடு - மீதி இறுப்பு
விரல் அடையாளப் பொறி
தரவு - விரல் கைரேகை
முறைவழிப்படுத்தல் - கைரேகை முறைவழிப்படுத்தப்படல்
வௌியீடு - வருகை தந்த நேரம், வௌிச்சென்ற நேரம்
QR குறிமுறை
தரவு - QR குறிமுறை
முறைவழிப்படுத்தல் - குறியவிழ்த்தல்
வௌியீடு - வலைத்தளத்திற்கு பிரவேசித்தல்
சந்தைத் தகவல்களை முறைவழிப்படுத்தல்
பண்பறி தகவலின் இயல்புகள்
- பொருத்தம்
- நபர் ஒருவரின் உயர் கல்வித்தகைமைகள் அவசியப்படும் வேலையில், முதலாம் தரத்தில் பெற்றுக் கொண்ட கல்வித் தகைமைகள் அவசியமற்றன. எனவே தகவல்கள் பொருத்தமானவையாக அமைதல் வேண்டும்.
- முழுமையானது
- ஒரு நாட்டின் தனிநபர் வருமானத்தை கணக்கிடுவதற்கு, சிறு குழுவொன்றிலிருந்து பெறப்படும் தகவல் போதுமானது அல்ல. முழுமையற்ற தகவல் பிழையான முடிவுகளைத் தரும். எனவே பெறப்படும் தகவல் முழுமையானதாக இருத்தல் வேண்டும்.
- செம்மை
- சரியான தகவல்களாக இருத்தல் வேண்டும். நோயாளி ஒருவரின் பிழையான தகவல்கள் வைத்தியருக்கு வழ்கப்படும் போது, அது நோயாளிக்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
- காலத்திற்குப் பொருத்தமாக இருத்தல்
- பெறப்படும் தகவல்கள் இற்றைப்படுத்தப்பட்டவையாக அமைதல் வேண்டும். இன்றைய தினத்துக்குரிய வானிலை எதிர்வு கூறல் , நாளைய தினத்திற்கு பொருத்தமற்றது.
- கிரயம் இழிவளவாதல்
- நிறுவனமொன்று இலாபமீட்டலை அதிகரிப்பதற்காக தேவையான திட்டமிடல்களை மேற்கொள்ள முதல், சேகரிக்கப்படவுள்ள தகவல்களுக்கான விரயம் குறைவாக இருத்தல் வேண்டும். தகவல்களுக்காக அதிக விரயம் ஏற்படின் நிறுவனத்திற்கு நஸ்டமாகும்.
1.3 தகவல் தொடர்பாடல் தொழினுட்பம்
தரவுகளை தயார் செய்து தகவல்களாக மாற்றுவதற்கும், அவற்றை சேமித்து வைக்கவும், அவற்றைப் பரிமாறிக் கொள்ளவும் பயன்படுத்தப்படும் தொழினுட்பம் தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் எனப்படும்.
1.4 தகவல் தொடர்பாடலின் பிரயோகங்கள்
- மின்னரசாங்கம்
- கல்வி
- சுகாதாரம்
- விவசாயம்
- போக்குவரத்து
- பொழுதுபோக்கு
- வியாபாரம்
- கைத்தொழில்
மின்னரசாங்கம்
ஓர் அரசாங்கம் தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியலைப் பயன்படுத்தி தனது நாட்டின் பிரஜைகளுடனும், கம்பனிகள், அரச, அரச சார்பற்ற அமையங்கள், பிற அரசாங்கங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைமைகளைப் பேணல்
மின்னரசாங்கத்துடன் தொடர்புடைய வலைத்தளங்கள்
அரச வலைப்பக்கம் - இங்கே அழுத்தவும் → www.gov.lk
அரச தகவல் நிலையம் - இங்கே அழுத்தவும் → www.dgi.gov.lk
தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல் நிலையம் - இங்கே அழுத்தவும் → www.icta.lk
· மின்னரசாங்க தொடர்புடைமைகள்
01. அரசு – பிரஜை (G2C) - தொடர்புடைமை
- அரச நிறுவகபெயர்பட்டியல்
- சிட்டைக்கொடுப்பனவுச் சேவை
- வாகன உத்தரவுச் சீட்டுகளைப் புதுப்பித்தல்
- அரச தகவல் நிலைய சேவைகள்
- அரசியலமைப்பு
- சட்டத் தொகுதிகள்
- இலங்கைப்படங்கள்
02. அரசு - வேறு அரசு (G2G) - தொடர்புடைமை
- தானிகர் அலுவலகம்
- விசா வசதிகள்
- உல்லாசப் பயணிகளுக்கான உதவிகள்
- அரச சட்டங்கள், இலங்கைச் சுங்க விபரங்கள்
- இலங்கையின் அழகான இடங்கள்
- இலங்கைப்படம்
03. அரசு – வியாபாரங்களுக்கு (G2B) தொடர்புடைமை
- பணக்கொடுப்பனவுச் சேவை
- வங்கித் தகவல்கள்
- வியாபாரங்களைப் பதிவு செய்தல்
- வியாபாரங்களும் முதலீடுகளும்
- வர்த்தக அமையத் தகவல்கள்
04. அரசு -தொழிலாளர்களுக்கு (G2E) தொடர்புடைமை
- படிவங்கள்
- வர்த்தமானி
- சுற்றுநிருபங்கள்
- அரச ஊழியர்களுக்கான கடன் வசதிகள்
கல்வித்துறையில் ICT யின் பிரயோகங்கள்
1. வகுப்பறையில்
2. எந்தவொரு இடத்திலும் எந்தவொரு நேரத்திலும் கற்பதற்கான வாய்ப்பு
3. ஆசிரியருக்கு கற்பிப்பதற்கான உதவி
4. அனைவருக்கும் நிகழ்நிலை தொலைதூர கல்வி மூலம் உயர்கல்வி வாய்ப்பு
5. கற்றல் முகாதை்துவ தொகுதி
1. வகுப்பறையில்
- கணினி முல நிகழ்த்துகை பயன்பாடு.
- பரிசோதனை வீடியோ பயன்படுத்தல்
- கணினியுதவியுடனான நிர்மணாங்கள் (படம் மற்றும் வீடியோ தயாரிப்பு)
- சஞ்சிகைகள், கட்டுரைகள், ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் பதிப்பீடு
- கற்சைசார் விளையாட்டுக்கள்
- CD இனூடாக கற்றல்
- இணையத்தினூடாக கல்வித் தகவல்களை சேகரித்தல்
2. எந்தவொரு இடத்திலும், எந்தவொரு நேரத்திலும் கல்வியைப்பெறுதல்
இணைய வசதியுள்ள கணினி அவசியம்
· அறிவகம் https://nenasala.lk/
· E தக்சலாவ www.e-thaksalawa.moe.gov.lk
· வலைப்பாடசாலை – http://www.schoolnet.lk/
· விதுமங்பெத – www.vidumanpetha.com
நன்மைகள்
· போக்குவரத்து இடர்பாடு குறைவு, செலவு இழிவு, நேர மீதம், களைப்பு இழிவு
3. ஆசிரியருக்கு
o கடினமான பாடங்களுக்கு வரிப்படங்கள், ஒளியுருக் காட்சிகளை காட்டல்
o முன்வைப்பை பயன்படுத்தி பாடத்தில் கவர்ச்சியை ஏற்படுத்தல்
o பாடக்குறிப்புகள் தயாரித்தல்
o இணையத்தின் மூலம் பாடத்திற்குரிய தகவல்களைப்பெறுதல்
4. கற்றல் முகாமைத்துவ தொகுதி - Learning Management System
மாணவர் தகவல்கள், ஆசிரியர் தகவல்கள், மதிப்பீடுகள், வினாவிடை, மன்றங்கள், நிர்வாகம், திட்டங்கள், செயற்பாடுகள், பாடசாலைத்தகவல்கள், பாடநெறிகள், குறிப்புகள், ஒப்படைகள், மேற்பார்வை
கற்றல் முகாமைத்துவதொகுதியின் வசதிகள் - மாணவனுக்கு
o வசதியான இடத்தில், வசதியானநேரத்தில் கற்றலுடன் தொடர்புறலாம்
o ஒப்படைகளை வீட்டில் செய்து பதிவேற்றம் செய்யும் வசதி
o மன்றங்களினூடு பிரச்சினைகளை முன்வைத்தல், கருத்துகளை சொல்லல், விடைகளை பெறுவதற்கான ஆற்றல்
o மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை வீட்டிலிருந்து பெற்றோர்களுக்கு அறிந்து கொள்ளலாம்.
கற்றல் முகாமைத்துவதொகுதியின் வசதிகள் - முகாமைத்துவத்திற்கு
o தரமான கற்றல் வளங்களை இணைத்தல்
o செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல், பெறபேறுகளை காட்டல்
o இற்றைப்படுத்தப்பட்ட மாணவர், ஆசிரியர், பாடசாலை தகவல்களை முகாமை செய்தல்
o மன்றங்களினூடு வினாக்களை வழங்கி, அவற்றுக்கான பதில்களைப் பெற்றுக் கொண்டு அவற்றுக்கான பின்னூட்டல்களை வழங்கும் வசதி
o மின்னஞ்சல் மூலம் பெற்றோர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை சமுதாயத்திற்கு தேவையான தகவல்களை அனுப்பல்,பெறும் வசதி
5. அனைவருக்கும் உயர்கல்வி
நிகழ்நிலை தொலைக்கல்வி
தகவல்தொடர்பாடல் தொழினுட்பத்தினூடு எந்தவொரு நாட்டிலிருந்தும் ஒருவர் தனக்கு விருப்பமானவாறு ஒரு கல்வி நிறுவகத்துடன் தொடர்ப்புபட்டு மிகக் குறைந்த செலவுடன் உயர்பாடநெறியைக் கற்றல்
தொலைக்கல்வியின் தற்றிறன்கள்
o நெகிழ்வான கால எல்லைக்குள் கற்கும் வசதி
o இலக்கமுறை நூலக தொடர்புடைமை
o நிகழ்நிலை ஒப்படைகள், வினாக்கொத்துகள்
o நிகழ்நிலையினூடு ஆசிரியருடன் தொடர்புபடுவதற்கான வசதிகள்
o ஆலோசனை சேவை வசதிகள் பெற்றுக் கொள்ளும் வசதி
சுகாதாரத்துறைக்கு
1. நோய்களை கண்டறிதல்
· கணிணிப்படுத்திய உடலின் அச்சுப்படை X1 கதிர்ப்பொறி CAT-Computerized Axial Tomography Machine
உடல் உற்பகுதிகளை முப்பரிமாண படமெடுக்கலாம்.
· காந்த பரிவு விம்பமாக்கற் பொறிMRI - Magnetic Resonance Imaging Machine
உடலின் உட்பகுதிகளின் ஒளிப்படங்களை பெற
· மின் இதயவரையப்பொறி ECG Machine - இதயத்தின் துடிப்பை அவதானிக்க
· இதயநோய் திரையிடற்பொறி – Cardiac Screening Machine
இதயத்தினுள்ளான அசைவை கணினியில் காட்டல்
· மின்மூளைய வரைபியற் பொறி EEG – Electro Encephalography
மூளையின் தொழிற்பாட்டை பதிவு செய்ய பயன்படும். நோயாளி தூங்கிக் கொண்டிருக்கும், விழித்திருக்கும் இரு நிலைகளிலும் தரவுகளைப் பெற்றுக்கொள்ளும்
· குருதிச் சீனியை சோதிக்கும் பொறி Blood Sugar Testing Machine
· குருதி அழுத்தத்தை அளக்கும் உபகரணம் Blood Pressure Testing Machine
2. தொலை மருத்துவம் Tele Medicine
தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தை பயன்படுத்தி ஒரு மருத்துவமனையிலிருந்து தொலைவில் உள்ள ஓர் இடத்தில் இருக்கும் ஒரு நோயாளியை அவதானித்தல் அல்லது சிகிச்சை செய்தல்.
தொலை மருத்துவத்தின் நன்மைகள்
a. அவசர சிகிச்சை பராமரிப்பு (தொலைவில், ஆகாய விமானம், கப்பல்)
b. வீட்டிலிருந்து சிகிச்சை
c. தொலை மருத்துவத்தால் அறிவுறுத்தல்களைப் பெறல் (விசேட மருத்துவர் மருத்துவமனையில் இல்பாத சந்தர்ப்பத்தில்)
d. தொலை அறுவைச்சிகிச்சை
e. தொலைப்பயிற்சி
விவசாயத் தொழில் – பயிர்செய்கை
01. வானிலை அளவீட்டுப் பொறிகள் (வானிலை, காலநிலை, மழைவீழ்ச்சி, காற்றின் திசை) மூலம் பயிர் செய்கைக்கும் அறுவடைக்கும் உகந்த காலம் தீர்மானிக்கப்படும்
02. தன்னியக்க பூச்சி கட்டுப்பாட்டுப் பொறி
பூச்சிகளின் திசை, அவற்றின் செறிவு, வளர்ச்சி, அசைவு என்பவற்றை அடையாளம் கண்டு கொள்ளலாம்
03. பயிரிடும் நிலத்தின் நிலைமையை அளவிடும் பொறி
நிலத்தின் நிலை (ஈரழிப்பு, செழிப்பு) பயிர்களுக்கு உகந்ததா என தீர்மானிக்க
04. சொட்டுமுறை நீர்வழங்கல்
தன்னியக்க முறையாக தொழிற்படும், அநாவசிய நீர் நுகர்ச்சி , நீர் குறைவினால் பயிர் அழிவதிலிருந்து பாதுகாப்பு
05. தன்னியக்க களையகற்றும் பொறி - பயிர்களுக்கு இடையிலுள்ள களைகளை அகற்றும்
06. ரொபோ தொழினுட்பத்தின் மூலம் செடிகளை நாட்டல் - சீரான இடைவௌியுடன் நடப்படும்
07. ரொபோ மூல அறுவடை
பாரிய பயிர்செய்கை நிலங்களில் பயிரின் வளர்ச்சி கட்டங்களை அவதானித்தல், அவற்றை பதிவு செய்தல், அறுவடை செய்தல்
08. பச்சையில்லம்
இயற்கை அனர்த்தங்களிலிருந்து (கடும் வெயில், மழை, வெப்பநிலை, குளிர், பூச்சிகள், கொள்ளை நோய்) பாதுகாக்க சிறந்த முறை. பயிர் செய்கைக்கு உகந்தவாறு ஔி, நீர், வளி என்பன கட்டுப்படுத்தப்படுகின்றன. அரிதான பயிர்களின் தரமான உற்பத்திகளை சந்தைப்படுத்தலாம்.
விவசாயம் – விலங்குப்பண்ணை
· வானொலிச் சைகை அடையாளமிடுதல் உபகரணம் (RFID – Radio Frequency Identification Device)
விலங்குக் கணக்கிடல், இனங்காணல், பிரதேசத்தை அறிதல்
· தன்னியக்க பால் கறத்தல் மற்றும் பரிசோதனை
பசுமாடுகளின் சுகாதாரச் சோதனை, பாலைப் பெறுதல், பாலின் நிலைமைகளை சோதித்தல்
· பாதுகாப்புக்காக
மூடிய சுற்று தொலைகாட்சி பாவனை (CCTV – Closed Circuit TV)
· விவசாயப் பண்ணை முகாமை
அறிக்கைகள் பேணல், இலாப நட்ட கணிப்பீடு, தொழிலாளர் சம்பளம்.
விவசாயம் - மீன்பிடித்தொழில்
உணரிகள் மூலம் மீன்கள் உள்ள பிரதேசங்களை இனங்காணலாம்
கைத்தொழில் - உற்பத்தி
ரொபோப் பொறிகள் பயன்பாடு
ரொபோ பயன்பாட்டின் நன்மைகள்
24 மணி சேவை, களைப்படையாமை, திறமை, செம்மை, தூய்மை
உற்பத்தியின் போது நவீன தொழினுட்பம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள்
· கணினி உற்பத்தி
· பொதியுறை உற்பத்தி
· பொதி செய்தல்
· வாகன உற்பத்தி
· பொருள்களில் சுட்டுத் துண்டிடுதல் (லேபல் ஒட்டுதல்)
· போத்தல்களை நிரப்புதல்
வியாபாரம்
· ஔியுருக் கலந்துரையாடல் (விசேட இடம் தேவையில்லை, செலவு, நேரம், உழைப்பு இழிவு)
· மனிதவள முகாமை
விரல் அடையாள அலகிடலி (Finger Print Scanner), அட்டை வாசிப்பான் (Card Reader) மூலம் தொழிலாளர் அடையாம் காணல், வருகை, செல்கை பதிதல்
· மின்வங்கியியல் தொகுதி
தன்னியக்க காசாள் பொறி மூலம் பண வைப்பு, எடுப்பு, இணைய மூல கொடுக்கல் வாங்கல், சிட்டைக் கொடுப்பனவு, பணப்பரிமாற்றம், கணக்கை பரிசோதித்தல்
· நிகழ்நிலை அங்காடி கொள்வனவு
இணையத்தினூடாக இந்நாட்டில் அல்லது வௌிநாட்டில் உள்ள வர்த்தக நிறுவனகங்களின் பொருள்களை அல்லது சேவைகளை வழங்கல், கொள்வனவு செய்தல்
நிகழ்நிலை அங்காடியின் நன்மைகள்
· எந்தவொரு நாட்டினதும் பொருளை கொள்வனவு செய்யலாம்
· 24 மணிநேரமும் திறந்திருக்கும்
· வசதியான இடத்திலிருந்து பொருள்களை அவதானித்து கொள்வனவு செய்யும் ஆற்றல்
· செலவு அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி
· பொருள் அல்லது சேவையை வீட்டிற்குப் பெறுவதற்கான வசதி
· பயணக் களைப்பு, நேரம் வீணாதல் இல்லை
போக்குவரத்து
· CCTV - வாகன நெரிசல், விபத்து, சட்ட விரோத செயல்கள் என்பவற்றை அவதானிக்க
· மின்சைகை விளக்கு
· நிறுத்த அடையாளக் குறியீட்டு முறை - வாகன உள்நுழைய அனுமதித்தல்
பொழுதுபோக்கு
· சங்கீதம்
· பார்க்கத்தவறிய தொலைகாட்சி நிகழ்ச்சி, திரைப்படம்
· சமூக வலையமைப்பு மூலம் ஏனையவர்களுடன் தொடர்பு
· தொழினுட்பத்தைப் பயன்படுத்தி உயர்தர வீடியோ காட்சிகளை ரசித்தல்
· கணினி விளையாட்டு
· மின்னூல் வாசிப்பு
· இயற்கை காட்சிகளை கமரா மூலம் படமெடுத்து அவற்றை கணினியில் பாதுகாத்தல்
- அடிமையாதல் (அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது, கணினி வியைாட்டுக்களில் ஈடுபடும் போது கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதுடன், மூட்டு வலி, முதுகுவலி, தலைவலி, பார்வை பிரச்சினை போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்)
- சமூக வலையமைப்பினூடு தகாத பொருத்தமில்லத நட்புகள் ஏற்பட வாய்ப்பு
- கணினி நச்சுநிரல் பாதிப்பு
- பொருத்தமற்ற வலைப்பக்கங்களுடன் இணைவதால் உளநோய் ஏற்பட்டு அதனால் தனக்கும், சமூகத்திற்கும் பாதிப்பு
- தனிப்பட்ட வாழ்விற்கு தீங்கு பயக்கும் படம், ஔியுரு தயாரிப்பு
- உடற் செயற்பாடுகள் குறைவடைவதன் காரணமாக ஏற்படும் மிகைப்பருமன்
- தனிமைப்படல்
- பதிப்புரிமை மீறல் - மென்பொருள் அல்லது ஒருவரின் ககலைப் படைப்பினை அனுமதியின்றி பிரதி செய்தல் மற்றும் அவற்றை பகிர்தல்
- எண்சட்டம் abacus உருவாக்கப்பட்டது (5000 வருடங்களுக்கு முன்)
- கூட்டற் பொறி Adding Machine – Blaise Pascal (1642). முதல் பொறிமுறை கணிதச் செய்கைகளை செய்யும் உபகரணம்
- 1674 Gottfried Wilhelm Von Leibnitz இனால் Pascal இன் உபகரணத்தை வகுத்தல், பெருக்கல் செய்யும் விதமாக மேம்படுத்தப்பட்டது.
- joseph Jacquard துளை அட்டைமுறை மூலம் தொழிற்படுத்தப்படும் நெசவுப் பொறி உருவாக்கப்பட்டது - (மேலதிக விபரத்துக்கு இங்கே அழுத்தவும்)
- துளை அட்டைமுறை எண்ணக்கருவை பயன்படுத்தி Charles Babbage பகுப்பு இயந்திரம் Analytical Engine அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதில் உள்ளீடு, முறைவழியாக்கம், வௌியீடு, சேமிப்பு எனும் எண்ணக்கருக்கள் பயன்படுத்தப்பட்டன. இவ்வெண்ணக்கரு கணினியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது. இதனால் கணிணியின் தந்தை என அழைக்கப்படுகிறார்
- Charles Babbage இன் பகுப்புப் பொறிக்கு கணினி நிகழ்ச்சித் திட்டங்களை தயாரிக்க முயற்சித்த Ada Lovelace முதல் கணினி நிகழ்ச்சித்திட்ட நுட்பவியலாளரராக கருதப்படுகின்றார்
- 944 இல் Howard Aiken இனால் IBM கம்பனியின் உதவியுடன் தன்னியக்க தொடரிக் கட்டுப்பாட்டுக் கணிப்பான் (Automated Sequence Control Calculator) (MARK 1) உற்பத்தி செய்யப்பட்டது
- பிரதான தொழிநுட்பம் வெற்றிடக்குழாய்
- தரவு உள்ளீடு, முறைவழியாக்கம்,சேமிப்பு, வௌியீடு என்பவற்றுக்கு துளை அட்டை பயன்படுத்தப்பட்டது.
- கணினி செய்நிரல் மொழிகளாக பொறிமொழி, ஒருங்கு சேர்ப்பு மொழி என்பன பயன்படுத்தப்பட்டன.
- தேக்கி வைத்த செய்நிரல் எண்ணக்கரு பயன்படுத்தப்பட்டது.
- பெரும் வெப்ப வௌியேற்றம்
- மெதுவான செயற்பாடு
- அளவில் பெரியது.
- கொண்டு செல்லல் கடினம்
- அதிகளவு மின்னுகர்வு
- விலைஅதிகம்
- உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் ENIAC,EDVAC,EDSAC,UNIVAC,IBM701
இரண்டாம் தலைமைுறைக்கணினி (1956 - 1963)
- பிரதான தொழினுட்பமாக திரான்சிற்றர் (திரிதடையம்) பயன்படுத்தப்பட்டது.
- நாடா பயன்படுத்தப்பட்டது.
- துணை நினைவகமாக நெகிழ்வட்டு, நாடா என்பன பயன்படுத்தப்பட்டன.
- ஒருங்கு சேர்ப்பு மொழி, உயர்செய்நிரலாக்க மொழி,
- ஒப்பீட்டளவில் குறைந்த பருமன்
- ஒப்பீட்டளவில் குறைந்த வெப்ப வௌியேற்றம்
- ஒிப்பீட்டளவில் குறைந்த மின்னுகர்வு
- ஒப்பீட்டளிவில் வேகம் அதிகம்
- விலை அதிகம்
- உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் - Honey well 400, IBM 7030, CDC 1604,UNIVAC,LARC
- பிரதான தொழினுட்பமாக ஒருங்கிணைந்த சுற்றுகள் (Integrated Circuits - IC) பயன்படுத்தப்பட்டன.
- இரண்டாம் தர நினைவகமாக உயர்கொள்திறன் வட்டுகள் பயன்படுத்தப்பட்டன.
- சாவிப்பலகை, சுட்டி பயன்படுத்தப்பட்டது.
- பணிசெய்முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது
- உயர்செய்நிரலாக்க மொழிபயன்படுத்தப்பட்டது.
- ஒப்பீட்டளவில் குறைந்த பருமன்
- ஒப்பீட்டளவில் குறைந்த வெப்ப வௌியேற்றம்
- ஒப்பீட்டளவில் குறைந்த மின்னுகர்வு
- ஒப்பீட்டளிவில் வேகம் அதிகம்
- விலை அதிகம்
- உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் IBM 360/370, PDP -8, PDP – 11, CDC 6600
நான்காம் தலைமுறைக்கணினி (1975 - 1989)
- பாரியளவு ஒருங்கிணைந்த சுற்றுகள் (Large Scale Integrated Circuits - LSIC), மிகப்பேரளவு ஒருங்கிணைப்பு சுற்று (Very Large Scale Integrated Circuits - VLSIC) பயன்படுத்தப்பட்டன.
- நுண்முறைவழியாக்கி பயன்படுத்தப்பட்டது.
- கையகக்கணினி (Palmtop), ஔியியல் வட்டுக்கள் , அதிக கொள்ளளவு வன்வட்டு, நெகிழ்வட்டு பயன்படுத்தப்பட்டன.
- தனியாள் கணினி, விரைவான கணினி வலையமைப்பு உருவாக்கப்பட்டது.
- வரைவியல் பயனர் இடைமுகத்துடனான பணி செயல்முறைமை பயன்படுத்தப்படடது.
- UNIX பணிசெயல்முறைமை
- ஒப்பீட்டளவில் குறைந்த பருமன்
- அங்கும், இங்கும் கொண்டு செல்ல முடியுமானது.
- இற்றைப் படுத்தல் இலகு
- ஒப்பீட்டளிவில் வேகம் அதிகம்
- உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் IBM PC, Apple II
- மிகப்பெரிய சுற்றுக்கள் (Ultra Large Scale)
- அதிக கொள்ளளவுடைய வன்வட்டு, கொண்டு செல்லக்கூடிய ஔியியல் வட்டு
- இணையம் பயன்படுத்தப்பட்டது
- மேம்படுத்தப்பட்ட வரைவியல் பயனர் இடைமுகத்தினைக் கொண்ட பணிசெயல்முறைமை.
- இணையம் மற்றும் பல்லூடக பிரயோகங்கள்
- செயற்கைநுண்மதியினை அடிப்படையாகக் கொண்ட குரல் அறிதல்(Voice Recognition) , வரியுரு கண்டறிதல் ( Character Recognition), எழுத்துக்களை வாசித்தல் ( Text to Speech), கையெழுத்து இனங்காணல் - Hand writing Recognition System போன்ற மென்பொருட்களின் பிரயோகம்.
- உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் IBM notebooks, Pentium PCs, SUN Workstations
