கணிதம் - தரம் 06

 

மாதிரிப் பரீட்சை 02

கணிதம் – தவணை 03

கேள்விகளை வாசித்து, விடைகளை உங்கள் பயிற்சிக் கொப்பியில் எழுதுக.

01. கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு விகிதத்திற்கும் இரண்டு சமவலு விகிதங்களை எழுதுக.

1) 2 : 3
2) 5 : 7
3) 70 : 10
4) 30 : 54

02. கீழே தரப்பட்டுள்ள விகிதங்களை எளிய வடிவில் தருக.

1) 35 : 45
2) 63 : 108
3) 20 : 50
4) 60 : 75

03. பேனை ஒன்றின் விலை 15 ரூபாய் எனின், 3 டசின் பேனைகளின் விலையைக் காண்க.

04. கீழே தரப்பட்டுள்ளவற்றைச் சுருக்குக.

1) 5 kg 345 g + 7 kg 567 g
2) 12 kg 598 g + 7 kg 987 g
3) 34 kg 345 g − 23 kg 768 g
4) 12 kg 950 g − 7 kg 567 g

05. கீழே தரப்பட்டுள்ள இடைவெளிகளைப் பூரணப்படுத்துக.

  1. 3.5 kg = g
  2. 4.56 kg = g
  3. 5678 g = kg
  4. 8900 g = kg
  5. 5462 g = g + g = kg + g
  6. 3200 g = g + g = kg + g

06. m = 9 எனின், பின்வரும் கோவைகளின் பெறுமானங்களைக் காண்க.

1) m + 5
2) m − 4
3) 2m + 5
4) 3m − 7

07. கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளுக்குரிய அட்சரகணிதக் கோவைகளை அமைக்க.

  1. என்னிடம் ரூபாய் 300 உள்ளது. அதில் b ரூபாயை உணவிற்காகச் செலவு செய்தேன். என்னிடம் உள்ள மீதிப் பணத்திற்கான கோவையை எழுதுக.
  2. அஸ்வர் y எண்ணிக்கையான புத்தகங்களை வாங்கினார். அம்ரி அவருக்கு மேலும் 5 புத்தகங்களை வழங்கினார். தற்போது அஸ்வரிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கைக்கான கோவையை எழுதுக.
  3. ஒரு போத்தலில் N எண்ணிக்கையான மாபிள்கள் இருந்தன. அவற்றில் 100 மாபிள்கள் விற்கப்பட்டன. போத்தலில் எஞ்சியுள்ள மாபிள்களின் எண்ணிக்கைக்கான கோவையை எழுதுக.
  4. எனது அப்பாவிடம் ரூபாய் 500 இருந்தது. எனது அக்கா அப்பாவிற்கு மேலும் m ரூபாய் கொடுத்தார். தற்போது அப்பாவிடம் உள்ள பணத்திற்கான கோவையை எழுதுக.

08. கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு கணியத்திற்கும் பொருத்தமான விடையைத் தெரிவுசெய்து (✓) அடையாளமிடுக.

1 வானவில்லின் நிறங்களின் எண்ணிக்கை
தெரிந்த கணியம்
தெரியாக் கணியம் – ஒருமை
தெரியாக் கணியம் – மாறி
2 மாணவனின் உயரம்
தெரிந்த கணியம்
தெரியாக் கணியம் – ஒருமை
தெரியாக் கணியம் – மாறி
3 இரண்டிற்கும் பத்திற்கும் இடையிலுள்ள முதன்மை எண்களின் எண்ணிக்கை
தெரிந்த கணியம்
தெரியாக் கணியம் – ஒருமை
தெரியாக் கணியம் – மாறி
4 ஒரு மீற்றரிலுள்ள சென்றிமீற்றர்களின் எண்ணிக்கை
தெரிந்த கணியம்
தெரியாக் கணியம் – ஒருமை
தெரியாக் கணியம் – மாறி
5 ஒரு கூடையிலுள்ள பூக்களின் எண்ணிக்கை
தெரிந்த கணியம்
தெரியாக் கணியம் – ஒருமை
தெரியாக் கணியம் – மாறி
6 தேங்காய் ஒன்றின் விலை
தெரிந்த கணியம்
தெரியாக் கணியம் – ஒருமை
தெரியாக் கணியம் – மாறி
7 ஒரு லீற்றர் பெற்றோலில் மோட்டார் சைக்கிள் செல்லும் தூரம்
தெரிந்த கணியம்
தெரியாக் கணியம் – ஒருமை
தெரியாக் கணியம் – மாறி
8 ஒரு சீப்பிலுள்ள வாழைப்பழங்களின் எண்ணிக்கை
தெரிந்த கணியம்
தெரியாக் கணியம் – ஒருமை
தெரியாக் கணியம் – மாறி

கணிதம் - தரம் 06

  மாதிரிப் பரீட்சை 02 கணிதம் – தவணை 03 கேள்விகளை வாசித்து, விடைகளை உங்கள் பயிற்சிக் கொப்பியில் எழுதுக. ...

இந்த வலைப்பதிவில் தேடு

Categories

Tags

Popular Posts

GIT Results - 2025

. 🎓 GIT Exam Results Search the result using the candidate’s name Enter the candidate’s name below to view the result. 🔍 You can enter part of the name. Example: FATHIMA, MOHAMED or RIZMI ⚠️ If candidates have similar names, enter more parts of the name to find the correct result.

Grade 10 - ICT Practical - Unit 08

📊 PowerPoint கோப்பு Power Point கோப்பினை பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும். ⬇️ Download File

Facebook

Responsive Advertisement

Popular

கணிதம் - தரம் 06
Grade 10 - ICT Practical - Unit 08
GIT Results - 2025