கணிதம் தரம் 06 - பரீட்சை 01


.

Σ

ஸாஹிரா கல்லூரி - அநுராதபுரம்

கணிதம் மாதிரிப் பரீட்சை

தரம் 06 பகுதி I 20 வினாக்கள்
1

பேனை ஒன்றின் விலை 15 ரூபா எனின் 20 பேனைகளின் விலையைக் காண்க?

2

நான்முகி ஒன்றின் முகங்களின் எண்ணிக்கை, உச்சிகளின் எண்ணிக்கை, விளிம்புகளின் எண்ணிக்கையை எழுதுக?

3

5 kg 354 g ஐ g இல் தருக?

4

4 l 547 ml + 7 l 856 ml இன் பெறுமானத்தைக் காண்க?

5

5 மணித்தியாலத்தை நிமிடத்தில் தருக?

6

12 km 456 m − 5 km 869 m இன் பெறுமானத்தைக் காண்க?

7

5/7 + 3/8 இன் பெறுமானத்தைக் காண்க?

8

7.35 − 4.78 இன் பெறுமானத்தைக் காண்க?

9

வானவில்லிலுள்ள நிறங்கள் தெரிந்த கணியமா அல்லது தெரியாக்கணியமா என எழுதுக?

10

10வது முக்கோண எண்ணையும் 3வது சதுர எண்ணையும் கூட்டும் போது கிடைக்கும் எண் எத்தனையாவது சதுர எண்ணாகும்?

11

உபதிசைகள் இரண்டின் பெயரை எழுதுக?

12

654 ஐ கிட்டிய 100ற்கு மட்டந்தட்டுக?

13

நிலைக்குத்து அளவுகளை அளப்பதற்குப் பயன்படும் உபகரணம் எது?

14

1234 எனும் எண்ணில் 2 இன் வகைக்குறிப்புப் பெறுமானம் யாது?

15

இணைகரத்தின் பண்புகள் இரண்டு தருக?

16

(−4) + (−8) இன் பெறுமானம் யாது?

17

1 cm² அடரைப் பயன்படுத்தி 17 cm² பரப்பளவுடைய தளவுருவை அமைத்துக் காட்டுக?

18

240 : 180 : 300 எனும் விகிதத்தை எளிய வடிவில் தருக?

19

கோணத்தை அளக்கும் அலகினைத் தருக?

20

3 : 5 எனும் விகிதத்திற்குரிய இரண்டு சமவலு விகிதங்களை எழுதுக.

கணிதம் - தரம் 06

  மாதிரிப் பரீட்சை 02 கணிதம் – தவணை 03 கேள்விகளை வாசித்து, விடைகளை உங்கள் பயிற்சிக் கொப்பியில் எழுதுக. ...

இந்த வலைப்பதிவில் தேடு

Categories

Tags

Popular Posts

கணிதம் - தரம் 06

  மாதிரிப் பரீட்சை 02 கணிதம் – தவணை 03 கேள்விகளை வாசித்து, விடைகளை உங்கள் பயிற்சிக் கொப்பியில் எழுதுக. 01. கீழே தரப்பட்டுள்ள ஒவ்வொரு விகிதத்திற்கும் இரண்டு சமவலு விகிதங்களை எழுதுக. 1) 2 : 3 2) 5 : 7 3) 70 : 10 4) 30 : 54 02. கீழே தரப்பட்டுள்ள விகிதங்களை எளிய வடிவில் தருக. 1) 35 : 45 2) 63 : 108 3) 20 : 50 4) 60 : 75 03. பேனை ஒன்றின் விலை 15 ரூபாய் எனின், 3 டசின் பேனைகளின் விலையைக் காண்க. 04. கீழே தரப்பட்டுள்ளவற்றைச் சுருக்குக. 1) 5 kg 345 g + 7 kg 567 g 2) 12 kg 598 g + 7 kg 987 g 3) 34 kg 345 g − 23 kg 768 g 4) 12 kg 950 g − 7 kg 567 g 05. கீழே தரப்பட்டுள்ள இடைவெளிகளைப் பூரணப்படுத்துக. 3.5 kg = g 4.56 kg = g 5678 g = kg 8900 g = kg 5462 g = g + g = kg + g ...

GIT Results - 2025

. 🎓 GIT Exam Results Search the result using the candidate’s name Enter the candidate’s name below to view the result. 🔍 You can enter part of the name. Example: FATHIMA, MOHAMED or RIZMI ⚠️ If candidates have similar names, enter more parts of the name to find the correct result.

Grade 10 - ICT Practical - Unit 08

📊 PowerPoint கோப்பு Power Point கோப்பினை பதிவிறக்கம் செய்ய பின்வரும் இணைப்பை அழுத்தவும். ⬇️ Download File

Facebook

Responsive Advertisement

Popular

கணிதம் - தரம் 06
Grade 10 - ICT Practical - Unit 08
GIT Results - 2025